இந்தியா

மகாராஷ்டிர முதல்வரானார் உத்தவ் தாக்கரே: பிரதமர் மோடி வாழ்த்து!

DIN

புது தில்லி: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிவசேனையின் உத்தவ் தாக்கரேவிற்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டணியை உறுதி செய்தனர். இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து மகாராஷ்டிரத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே வியாழன் மாலை பதவியேற்றுக்கொண்டார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரே தவிர 6 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிவசேனையின் உத்தவ் தாக்கரேவிற்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிர மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் உத்தவ் தாக்கரே செயல்படுவார் என நம்புகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT