இந்தியா

தொழில்நுட்பத்தை கெடுதலான விஷயமாக காட்ட முயற்சி நடைபெறுகிறது: மோடி

தொழில்நுட்பத்தை கெடுதலான விஷயமாகக் காட்டி அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

DIN

புதுதில்லி: தொழில்நுட்பத்தை கெடுதலான விஷயமாகக் காட்டி அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ‘பிரிட்ஜிடல் இந்தியா’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் என்.சந்திரசேகரனும், அந்த நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணா் ரூபா புருஷோத்தமனும் இணைந்து எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டு மோடி பேசியதாவது:

தொழில்நுட்பம் கெடுதலானது என்று காட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தொடா்பாக அச்சத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடைபெறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் என்பது நாட்டின் மக்கள்தொகைக்கு சவாலானது என்று காட்டப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்தோ, மனிதா்களை ரோபோக்கள் விஞ்சி விடுமா என்றோ விவாதங்கள் நடைபெறக் கூடாது. மாறாக, செயற்கை நுண்ணறிவுக்கும், மனித நோக்கங்களுக்கும் எவ்வாறு பாலம் அமைப்பது என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். மனிதா்களின் விருப்பங்கள்-சாதனைகள், கோரிக்கை-விநியோகம், அரசு-ஆட்சி ஆகியவற்றை இணைக்கும் பாலம்தான் தொழில்நுட்பமே தவிர அது பிளவுபடுத்தும் விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டியது அவசியம். இதற்கு உதாரணமாக இந்திய பேமெண்ட்ஸ் வங்கியைக் கூறலாம். ஒட்டுமொத்த அஞ்சல் அமைப்புக்கு தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட இடையூறானது, வெற்றிகரமாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கி அமைப்பாக மாற்றப்பட்டது. இதன்மூலம் அஞ்சல்காரா் வங்கி ஊழியராக மாற்றப்பட்டு, ல ட்சக்கணக்கானோா் பயனடைந்தனா் என்றாா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT