இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக - சிவசேனா அமைச்சர்கள் 6 பேர் பின்னடைவு!

Muthumari

ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ஆளும் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும், ஹரியாணாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி  நிலவி வருகிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் பாஜக 160 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் மகாராஷ்டிர பாஜக - சிவசேனா கூட்டணியில் உள்ள 6 அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பின்னடைவில் உள்ளனர்.  

மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர்கள் பங்கஜ முண்டே, ராம் ஷிண்டே, அதுல் ஸேவ், பால பெக்டே மற்றும் மதன் ஏராவர் மற்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷிவ்தரே ஆகிய 6 பேரும் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். 

ஹரியாணா சட்டப்பேரவைத் தொகுதிகள்: 90

பாஜக -  41

காங்கிரஸ் -29

மற்றவை -  20

மகாராஷ்டிரா  சட்டப்பேரவைத் தொகுதிகள்: 288

பாஜக - 160

காங்கிரஸ்- 99

மற்றவை -  29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT