இந்தியா

மகாராஷ்டிர  சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த அமைச்சர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Muthumari

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில், 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 தொகுதிகளையும், 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

இதில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் தோல்வியுற்றனர். 

அவர்களின் விபரம் பின்வருமாறு:

ஊரக வளர்ச்சி மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே, பார்லி தொகுதியில் தனது உறவினர் தனஜய் முண்டேவிடம் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பங்கஜா, மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார். 

​​கர்ஜத்-ஜாம்கேட் தொகுதியில் போட்டியிட்ட அஹ்மத்நகர் கார்டியன் அமைச்சரும், நீர் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராம் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோஹித் பவாரிடம் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

மாவல் தொகுதியில், தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சஞ்சய் பெகாடே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் ஷெல்கேவிடம் 95,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் விஜய் சிவ்தரே, புனே மாவட்டத்தில் புரந்தர் தொகுதியில் காங்கிரஸின் சஞ்சய் ஜக்தாப்பிடம் தோற்றார். 

ஜல்னா தொகுதியில், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்(சிவசேனா) அர்ஜுன் கோட்கர், காங்கிரஸ் வேட்பாளர் கைலாஸ் கோரந்தியாலிடம் தோற்றார். 

அமராவதியில் மோர்ஷி தொகுதியில், பாஜகவின் வேளாண் அமைச்சர் அனில் போண்டே, ஸ்வாபிமானி பக்ஷாவின் தேவேந்திர புயரிடம் தோற்றார். 

சிவசேனாவின் வேலைவாய்ப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சர் ஜெயதுத் கிஷிர்ஷாகர், பீட்(Beed) தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள தனது மருமகன் சந்தீப் கிர்ஷாகரிடமே தோற்றார்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அஹேரி சட்டசபை தொகுதியில், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சரான பாஜகவின் அம்ப்ரிஷ் அட்ரம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பகவந்த்ராவ் ஆத்ரமிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT