முகப்பு
இந்தியா

இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இவரைப் போன்றவர்கள்தான்: ஏன் இப்படி பாய்கிறது காங்கிரஸ்?

இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:32 AM
பத்ருதீன் அஜ்மல் எம்.பி
பகிர்:

புது தில்லி: இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு இனிமேல் அரசு வேலை கிடையாது என்று   அசாம் மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனைக் கடுமையாக விமர்சித்து நாடாளுமன்ற எம்.பியும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் சனிக்கிழமையன்று பேசும்போது, ' இஸ்லாமியர்கள் யாருடையாய் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து குழநதை பெற்றுக் கொண்டேதான் இருப்பார்கள். அரசு எப்படியும் இஸ்லாமியர்களுக்கு வேலைகளை அளிக்கப்போவது இல்லை. நாங்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை' என்று கடுமையாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா செய்தியாளர்களிடம் கூறியதாவதது:

தன்னார்வக் குடும்பக் கட்டுப்பாடு என்பது இப்போதைய காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள் இதனை மதரீதியாக சிதைத்து பேசும்போது, நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்கக்ளின் எதிர்காலத்தை விலையாக்கி, அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு அவர் துணை போகிறார் என்றுதான் அர்த்தம்.

இத்தகைய அறிக்கைகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசிவிடுகின்றன. அத்துடன் இதன் மூலம் அரசியல் லாபம் அடைவதற்கான ஒரு வாய்ப்பை பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுகின்றன.

இஸ்லாமியர்களுக்கு அரசு வேளைகளில் உரிய பங்கு உள்ளது. அதைக் குறித்து தீர்மானிப்பதற்கு இவர் யார்? இஸ்லாமியர்கள் பின்தங்கி இருப்பதற்கு பத்ருதீன் அஜ்மல் எம்.பி போன்றவர்கள்தான் காரணம்.

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.     

முழு கட்டுரையைப் படிக்க →