முகப்பு
இந்தியா

உன்னாவ் பலாத்கார சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் செங்கா் வீட்டுக்குச் சென்ற உ.பி சபாநாயகர்

உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:32 AM
குல்தீப் செங்கா்
பகிர்:

உன்னாவ்: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பதின்ம வயதுப் பெண் ஒருவா் அளித்த பாலியல் புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.அதேசமயம் அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்குரைஞா், உறவினா்களுடன் காரில் சென்றபோது அவா்கள் மீது லாரி ஒன்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி மோதியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா்.

இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கா் வீட்டுக்கு மாநில சபாநாயகர் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குல்தீப் செங்கரின் சகோதரர் மனோஜ் செங்கர் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார். அவரது உடல் அடக்கம்  திங்கள் காலை சொந்த கிராமமான மகியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக குல்தீப் செங்கருக்கு 72 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

குல்தீப் செங்கருக்கு நெருக்கமானவரும் , உ.பி மாநில சட்டப்பேரவை சபாநாயகருமான ஹ்ருதய் நரைன் தீக்ஷித் இறந்து போன மனோஜ் செங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த வீட்டிற்கு திங்கள் காலை சென்றிருந்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →