முகப்பு
இந்தியா

நிஃப்டி 225 புள்ளிகள், சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 225 புள்ளிகள், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் செவ்வாய்க்கிழமை மாலை வணிகம் நிறைவு பெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2019 at 4:20 PM
பகிர்:


மும்பை: தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 225 புள்ளிகள், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிவுடன் செவ்வாய்க்கிழமை மாலை வணிகம் நிறைவு பெற்றது.

முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

வங்கிகள் இணைப்பு குறித்து மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், கார்ப்பரேஷன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையில் இயங்கும் வங்கிகளின் பங்குகள் இன்று அதிகளவில் விற்பனைக்கு வந்ததும் பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம்.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5% ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.