இந்தியா

குடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு

DIN

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று சந்தித்தார். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதிலிருந்து, அங்கு மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. காஷ்மீருக்கு ஆதரவாகப் பல்வேறு கருத்துகளை பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT