இந்தியா

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள்!

Muthumari

நாட்டின் தலைநகரில் உள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் தற்கொலை முயற்சிக்கான இடமாக மாறி வருகிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாகும். இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், டெல்லி மெட்ரோவின் பல்வேறு வழித்தடங்களில் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். ஜனவரி 2018 முதல் மே 2019 வரை டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 25 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

மேலும், 2014- 2018ம் கால கட்டத்தில் 80க்கும் அதிகமாக தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகவும் தகவல் உள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக 22 வயதான பாதுகாப்பு காவலர் ஒருவர் செக்டர் 61 மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திங்கட்கிழமை ஜாண்டேவலன் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரயில் வரும் போது மட்டுமே திறக்கும் அளவுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், காவல்துறை இந்தத் தற்கொலை முயற்சிகள் குறித்து விசாரணை செய்து வருவதால், இதுகுறித்த பல கேள்விகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT