இந்தியா

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: உயிரிழந்தோர் 23ஆக உயர்வு

DIN

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் படாலா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 27 காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

குடியிருப்புப் பகுதிகளுக்கிடையே இந்தத் தொழிற்சாலை உள்ளதால் அருகில் உள்ள சில வீடுகளிலும் விபத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவருக்கு ரூ.25ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT