இந்தியா

காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல்

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து மற்றும் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவுகளை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. நிலைமை மேம்படுவதைப் பொருத்து, கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. 

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விரும்பாத பாகிஸ்தான் இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால், இந்தியாவுடன் பதற்றமான சூழல் உள்ளதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத செயல்களைத் தூண்டிவிடவும் பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா பகுதியில் வந்த லாரியை பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது லாரியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

courtesy image ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT