இந்தியா

'நாட்டில் வேலை இருக்கிறது; வேலைக்கான தகுதி தான் இல்லை' - மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

நாட்டில் போதுமான வேலைகள் இருக்கின்றன; ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் இல்லை என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டில் போதுமான வேலைகள் இருக்கின்றன; ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் இல்லை என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். 

மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, 'நாட்டில் வேலைவாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது. எனவே, வேலைக்கு இங்கு பஞ்சமில்லை. ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் நம் நாட்டில் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும்பட்சத்தில், அவர்கள் வழங்கும் வேலைக்கு இங்கு தகுதியானவர்கள் இல்லை என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது' என்று தெரிவித்தார். 

வேலைவாய்ப்பின்மை குறித்து அமைச்சர் கூறியது இளைஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பரபரப்படும் தகவல்கள் பொய்யானவை என்று அமைச்சர் கங்வார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

இந்த வார ஓடிடி படங்கள்!

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

SCROLL FOR NEXT