இந்தியா

ஒடிசாவில் போதையில் வாகனம் ஓட்டிய 426 'குடி'மகன்கள் பிடிபட்டனர்!

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி 426 பேரை ஒடிசா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

Muthumari

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி 426 பேரை ஒடிசா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அபாராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தும் செய்திகளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில், ஒடிசாவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி மாநிலம் முழுவதும் வாகன சோதனைகளில் ஈடுபட்ட போலீசாரிடம், குடிபோதையில் 426 பேர் சிக்கியுள்ளனர்.

சுமார் 5,000 வாகன ஓட்டிகளை சோதனை செய்ததில், அவர்களில் 426 பேர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் 141 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு  குடிபோதையில் வாகனம் ஓட்டுவது காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT