கோப்புப்படம் 
இந்தியா

'சிதம்பரத்தின் நிலைமை தான் உங்களுக்கும்' - மம்தாவை எச்சரிக்கும் பாஜக எம்.எல்.ஏ! 

மம்தா பானர்ஜி தனது தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை எனில் ப.சிதம்பரத்தின் நிலைமை தான் அவருக்கும் வரும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை எனில் ப.சிதம்பரத்தின் நிலைமை தாம் மம்தாவுக்கும் வரும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுரேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் அவர் பேசும் தன்மையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவரது வாழ்க்கையும் ப.சிதம்பரத்தைப் போலவே முடிவடையும். ப.சிதம்பரம் எதிர்கொண்டதை அவரும் சந்திக்க வேண்டியிருக்கும். தன்னை நோக்கி மோசமான நாட்கள் வருகிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 

வங்கதேசத்துக்கு மக்களுக்காக பேசும் அவர் வங்கதேச பிரதமராக ஆவதற்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று முயற்சிக்கலாம். ஏனெனில், மேற்குவங்கத்தில் ராமர் மற்றும் அனுமராக, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் விளையாடுவதற்கு களமிறங்கியுள்ளனர்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, முஸ்லீம் ஆண்கள், பல மனைவிகளை வைத்துக்கொண்டு விலங்கினம் போன்ற போக்கை கையாள்கின்றனர்; பத்திரிகையாளர்கள் அனைவரும் 'புரோக்கர்கள்', மருத்துவர்கள் அனைவரும் 'பேய்கள்', 'வந்தே மாதரம்' என்று கோஷமிடாதவர்கள் வாழ்வதற்கே தகுதியானவர்கள் அல்ல என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியவர் சுரேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமெல்லாம் காதல் வாழ்க- தீப்தி சுனைனா

காஞ்சிபுரம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பேர் பலி!

அழகிய கண்ணே - ராஷி சிங்

பெண் கொலை: கணவா் மீது வழக்குப் பதிவு

கரூர் பலி! முன்னாள் ஐபிஎஸ் அலுவலராக அண்ணாமலை என்ன சொல்கிறார்? | Bjp Annamalai | karur stampede

SCROLL FOR NEXT