கோப்புப்படம் 
இந்தியா

பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி

பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

DIN


பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். 

ஹிந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஒரு டிவீட் செய்திருந்தார். அதில், ஹிந்தி மொழி மூலம் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்றும் ஹிந்தி மொழியால் சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஹிந்தி தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியிலும் இந்த கருத்தை ஒட்டியே உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை கடுமையாக வெளிப்படுத்தினர். 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அமித்ஷாவின் கருத்துக்கு பதில் தரும் வகையில், தற்போது டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில் இந்தியாவில் இருக்கும் ஒரியா, மராத்தி, கன்னடம், ஹிந்தி, தமிழ், குஜராத்தி, ஆங்கிலம், வங்காளம், உருது, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 25 மொழிகளைக் குறிப்பிட்டு "பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT