இந்தியா

சின்மயானந்தா சிறையில் அடைப்பு

DIN

உத்தரப் பிரதேசத்தில் சின்மயானந்துக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த மாணவி சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில், நீதித் துறை நடுவர் கீதிகா சிங் முன்னிலையில் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

அவர் வாக்குமூலம் அளித்த அடுத்த சில மணிநேரத்திலேயே சுவாமி சின்மயானந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவருக்கு எதிராகப் புகார் அளித்த மாணவி மிரட்டல் விடுத்துள்ளார். 

ஷாஜகான்பூரில் கல்லூரி விடுதியில் மாணவி தங்கியிருந்த அறை, சின்மயானந்தின் வீடு ஆகிய இடங்களிலும், மாணவியின் தாயார், ஆண் நண்பர்கள், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பாலியல் புகார் வழக்கில் சின்மயானந்தா சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஷாஜகான்பூரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சின்மயானந்தாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஷாஜனான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT