இந்தியா

அயோத்தி வழக்கு விசாரணை 23-ஆம் தேதி ஒரு மணி நேரம் நீட்டிப்பு

அயோத்தி வழக்கின் விசாரணையை, வரும் திங்கள்கிழமை ஒரு மணி நேரம் நீட்டிப்பதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

DIN


அயோத்தி வழக்கின் விசாரணையை, வரும் திங்கள்கிழமை ஒரு மணி நேரம் நீட்டிப்பதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு முடிவு காண்பதற்காக, இந்த வழக்கினை உச்சநீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக் கொள்ளுமாறு ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு 28-ஆவது நாளாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தினமும் மாலை 4 மணி வரை விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை (செப்.23) மாலை 5 மணி வரை விசாரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை, அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உச்சநீதமன்றம் முடிவு செய்துள்ளது. மற்றொரு புறம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அதற்கு முன்னதாகவே இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT