இந்தியா

விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

DIN

சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளர்.

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை. அதே சமயம் சந்திராயன்-2 ஆர்ப்பிட்டர் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஆர்ப்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன. அனைத்துமே சிறப்பான முறையில் இயங்கி தகவல்களை அனுப்பி வருகிறது.

இஸ்ரோ இப்போது ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT