இந்தியா

அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி கூடாது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

DIN


அரசுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த 169 ஐஏஎஸ் அதிகாரிகள், ராம்நாத் கோவிந்தை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். 
அவர்கள் தற்போது அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் ராம்நாத் கோவிந்த் கூறியதாக, குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பணியில் அதிகபட்ச வெற்றியை சாத்தியமாக்குவதற்கான அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். இலக்கை எட்டுவதில் ஒவ்வொருவரையும் சேர்த்துக் கொண்டு, அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு பணியாற்றும் காலத்தில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சமூக-பொருளாதார திட்டங்களை செயல்படுவத்துவதில் மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல் போக வேண்டும். மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு அலுவலர்களின் அணுகுமுறைகள் இருக்க வேண்டும். மக்கள் வாழ்வதற்கான சூழலை எளிமையாக்க வேண்டும் என்பதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் ரூ.350 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்; விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும்; சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் சம அளவில் பங்களிப்பு செலுத்த வேண்டும் போன்ற இலக்குகளை எட்ட வேண்டுமெனில் உங்கள் பணியை திறம்படச் செய்திட வேண்டும்.
நீங்கள் கடுமையாக உழைத்ததால், வாழ்க்கையில் இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். 
இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT