அமைச்சரவைக் குழுக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை கூடுகிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
இந்தியாஅமைச்சரவைக் குழுக் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை கூடுகிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் திங்கள்கிழமை அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அநேகமாக இந்திய வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாக இருக்கக்கூடும். அதேசமயம், மார்ச் 24-இல் இருந்து 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதுவாகும்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த இரண்டு கூட்டத்துக்குமே பிரதமர் மோடிதான் தலைமை வகிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதை மேலும் சிறந்த வகையில் செய்து முடிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,082 ஆக உள்ளது.