கரோனாவை வெல்வதற்காக தலையை மொட்டை அடித்துக் கொண்ட 68 காவலர்கள்
கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆக்ரா: கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 68 காவலர்கள்தான் இவ்வாறு கரோனவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியேற்று தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர்.
மொட்டை அடித்துக் கொண்ட காவலர்கள் பதேபூர் சிக்ரி நகர வீதிகளில் அணிவகுப்பில் சென்ற விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது .
கரோனாவிற்கு எதிராக இறுதி வரை உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்ததாக நிலைய காவல் அதிகாரி புபேந்திர பலியான் தெரிவித்துள்ளார்.