இந்தியா

கோவாவில் 7 பேருக்கு கரோனா உறுதி: சுகாதார அமைச்சர்

கோவாவில் 563 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

IANS

பனாஜி: கோவாவில் 563 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த நாட்டுச் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று நோயைச் சோதிக்க 2000 துரிதக் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது சுமார் ஒரு மணி நேரத்தில் முடிவுகள் வெளியிடும்.

கோவாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்று ரானே செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏறக்குறைய 2,000 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோவா நிறுவனமான மோல்பயோடெக்ஸுடன் இணைந்து சுகாதாரத்துறை ஐந்து இயந்திரங்கள் மற்றும் 2,000 'ட்ரூனாட்' விரைவு சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது, 

இது ஒரு வகையான பி.சி.ஆர் அடிப்படையிலான கண்டறியும் கருவியாகும், இது ஒரு மணி நேரத்தில் முடிவுகளைத் தரும்" என்று ரானே கூறினார்.

முகமூடிகளைத் தைப்பதற்கான பணி சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை சுகாதாரப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT