முகப்பு
இந்தியா

தாசில்தாரை வீடு புகுந்து தாக்கிய பாஜக எம்பி!

உத்தரபிரதேசத்தில் தாசில்தார் ஒருவரை பாஜக எம்பி வீடு புகுந்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2020 at 7:56 PM
எம்பி சுப்ரத் பதாக்
பகிர்:

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் தாசில்தார் ஒருவரை பாஜக எம்பி வீடு புகுந்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சுப்ரத் பதாக். இவர் அவரது தொகுதிக்குட்பட்ட அர்விந்த் குமார் என்னும் தாசில்தாரை அவரது வீட்டிற்குள் தனது ஆதரவாளர்களுடன் எம்பி புகுந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

எம்பி சுப்ரத் பதாக் தாசில்தார் அர்விந்த் குமாரை குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துத் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அவை விதிகளுக்கு முரணாக இருந்ததால் தான் அதை நிறைவேற்றவில்லை என்றும், இதன் காரணமாக எம்பி தனது ஆதரவாளர்களுடன் வீடு புகுந்து தாக்கியதாகவும் அர்விந்த் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால் தாசில்தாரின் வீட்டிற்கு சில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவே தான் சென்றதாகவே எம்பி பதாக் தெரிவித்துள்ளார்.  

தாசில்தாரின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.