இந்தியா

வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் கட்டாயம்: தில்லி முதல்வர்

DIN


தில்லியில் வீட்டைவிட்டு யார் வெளியே வந்தாலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து 600-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்ததாவது:

முகக் கவசம் அணிவது கரோனா வைரஸ் பரவலை கணிசமாகக் குறைக்கும். எனவே, வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. துணியால் ஆன முகக் கவசமும் அணியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT