விசாகப்பட்டினத்தில் உறவினர்களின்றி நடைபெற்ற திருமணம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக விசாகபட்டினத்தில் உறவினர்கள் யாருமின்றி திருமணம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக விசாகப்பட்டினத்தில் உறவினர்கள் யாருமின்றி திருமணம் நடைபெற்றது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாலிநலம், விசாகப்பட்டினத்தில் மகேஷ் மற்றும் சௌஜன்யாவின் திருமணம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயமானது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது திருமணம் அனகபள்ளியின் என்.டி.ஆர் காலனியில் உள்ள மணமகனின் வீட்டில் வியாழக்கிழமை இரவு 11.20 மணிக்கு எளிமையான முறையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ஆறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு பாதிரியார் கலந்து கொண்டனர். இதுகுறித்து மணமகனின் தந்தை கூறுகையில், எனது மகனின் திருமணம் நான்கு மாதங்களுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டது. நாங்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் திருமணத்தை நடத்தினோம். திருமணத்தின் போது ஆறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு பாதிரியார் கலந்து கொண்டனர் என்றார்.