முசாபர்நகரில் தனிமைப்படுத்தப்பட்ட 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் வேலை செய்துவந்த 21 வயதான இளைஞர் ஆஷு. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாகத் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் கேந்திரிய கிராமத்துக்குத் திரும்பியுள்ளார்.
இதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால், விரக்தியடைந்த ஆஷு வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.