ஜார்க்கண்டில் மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி
ஜார்க்கண்டின் போகரோ மாவட்டத்தில் மேலும் 2 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்குப்..
ஜார்க்கண்டின் போகரோ மாவட்டத்தில் மேலும் 2 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துணை ஆணையர் முகேஷ்குமார் கூறியதாவது...
ஜார்க்கண்டில், 68 வயது முதியவர் மற்றும் 45 வயதுடைய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 8-ம் தேதி 72 வயது முதியவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் இரண்டு பேர் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போகாரோவில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.
கடந்த மார்ச் 31-ம் தேதி முதன் முதலாக மலேசியப் பெண்ணுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் ராஞ்சியில் உள்ள ஹிந்த்பிரி வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.