முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் லேசான நில அதிர்வு; ரிக்டரில் 2.7 ஆகப் பதிவு

புது தில்லியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:


புது தில்லி: புது தில்லியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சத்தில் இருந்த மக்கள், இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டதால் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.