மும்பை தாராவியில் 2 பேர் மரணம்; கரோனா பாதிப்பு 55 ஆனது
மும்பை தாராவியில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்துவிட்டனர். புதிதாக மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாராவியில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்துவிட்டனர். புதிதாக மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையின் குடிசைப் பகுதியில் கரோனா பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது.
தாராவியில் முஸ்லிம் நகர், கல்யாண்வாடி, ஜனதா சொசைடி மற்றும் ராஜீவ் நகர் பகுதிகளில் இன்று புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, தமிழர்கள் அதிகளவு வசிக்கும் மும்பை தாராவியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு இன்று மட்டும் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு கரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அப்பகுதியில் கரோனாவுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.