ஆந்திரத்தில் 2 பேர் பலி, புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். புதிதாக 34 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். புதிதாக 34 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால், ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 473 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து ஆந்திரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.