ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இருவர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் எல்லை வழியாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில்..
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் எல்லை வழியாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட குடும்பத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சகோட் துறையின் ராஜதானி பகுதியில் உள்ள லமிபரி கிராமத்தில் உள்ள நசீர் உசேன் வீட்டின் அருகே திடீரென மோட்டார் வாகனம் ஒன்று மோதியது, இதில் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 70 வயதான ரபீக் கான் மற்றும் சோனியா ஷபீரை மன்ஸூர் காவல்துறையினர் மீட்டு ரஜோரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் பாலகோட் மற்றும் மெந்தர் ஆகிய இடங்களுக்கு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இருதரப்பினர் இடையே நேற்றிரவு பல மணி நேரம் இடைவிடாது தாக்குதல் நடைபெற்றது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்துவா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை நடத்திய தாக்குதல், எல்லையில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.