குஜராத்தில் மேலும் 3 பேர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில்
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை உலுக்கிவருகின்றது. இந்நிலையில் உலகளவில் பலி எண்ணிக்கை 1.35 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி குஜாராத் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி கரோனாவுக்கு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதார முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார்.
அதில் கட்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது முதியவரும், போடாட்டில் 80 வயதான முதியவரும், அகமதாபாத்தில் எஸ்.வி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது மூதாட்டியும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.