முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 9 பேருக்கு கரோனா உறுதி 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 198 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதில், பாக்பட்டானில் ஒன்றும், சாஹிவாலில் ஆறு பேருக்கும் மேலும் பஹவல்பூரில் இரண்டு பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலகளவில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் கரோனாவால் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் மட்டும் 6,506 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால், கரோனா தொற்று தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.