முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் அடுத்த 3 நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு 

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 24-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 24-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பாராக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 57 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், டம் டம் விமான நிலையத்தில் இன்று காலை 8.30 வரை 4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. 

கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வங்காள விரி குடாவில் வலுவான ஈரப்பதம் காணப்படுவதால், மேற்கு வங்காள மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.