முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காவல் அதிகாரி விடுவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காவல் அதிகாரி ஒருவர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வியாழக்கிழமை இரவு 9.40 மணியளவில் ஷோபியனில் உள்ள அவரது வீட்டிலிருந்து காவல் அதிகாரி ஜவாத் ஜபாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர் கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் தீவிரவாதிகள் அவரை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹஸ்ரத்பால் பகுதியில் உள்ள துணைப் பிரிவில் ஜபார் மாற்றப்பட்டிருந்தார். எனவே, விடுப்பிலிருந்த அவர் தனது குடும்பத்தினைப் பார்க்கச் சென்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.