முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இன்று காலை 11.30 மணிக்கு அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.