முகப்பு
இந்தியா

பிகாரில் புதிதாக 6 பேருக்கு கரோனா: பாதிப்பு 176 ஆனது

பிகாரில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

பாட்னா: பிகாரில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் முங்கர் மாவட்டத்தின் ஜமல்பூரின் சதர் பஜார் பகுதியில் ஒரு சிறுவன், இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் உள்பட ஆறு பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்று 
சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

ஜமல்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 12-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை 60 வயது உடையவர்கள் கடந்த மாதம் நாலந்தா மாவட்டத்திற்கு தப்லீக் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்தவர்கள். 

முங்கரில் (37) மற்றும் நலந்தாவில் (31) என மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் அதிகப்படியான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 38 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதுவரை 176 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.