முகப்பு
இந்தியா

பிகாரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 225ஆக உயர்வு

பிகாரில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

பிகாரில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே நேற்று அதிகபட்சமாக 1752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி 1,540 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதே, ஒருநாளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் பிகாரில் இன்று மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நயா போஜ்பூர் மற்றும் பூஜார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 45 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →