ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள லோயர் முண்டாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து பயங்கரவாதி ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.