இந்த ஆண்டு அமோக விளைச்சல்; ஆனால் குப்பையில் கொட்டுகிறோம்: பூ விவசாயி கண்ணீர்
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.
சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பூ விவசாயி சீமா, தனது குடும்பத்தினருடன், தினமும் விவசாய நிலத்துக்கு வந்து அழகழகாய் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்து அருகே இருக்கும் குப்பையில் கொட்டி வருகிறார். பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டால், செடியில் பூச்சி ஏற்பட்டுவிடும் என்று நாள்தோறும் கணவர் மற்றும் மகளுடன் பூக்களைப் பறித்து குப்பையில் கொட்டி வருகிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், தினமும் நாங்கள் இங்கு வந்து பூக்களை பறித்து குப்பையில் கொட்டுகிறோம். ஒரு வேளை இப்படி ஒரு சூழ்நிலை வராவிட்டால், நாங்கள் மிகப்பெரிய லாபத்தை பார்த்திருப்போம், ஏன் என்றால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்கிறார் கண்ணீரோடு.
Advertisement