இந்தியா

கேரள முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்: பாஜக 18 நாட்கள் உண்ணாவிரதம்

DIN

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் 18 நாட்கள் சத்தியாகிரக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் காணொலி காட்சி வாயிலாக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடக்கப்பட்டது.

அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் பூபேந்தர் யாதவ், வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதல்வர் அலுவலகம் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பினராயி விஜயனால், நிர்வகிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கக் கூடிய இடத்தில் உள்ளதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி நான் பாஜக மாநில அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். இது முதல் நாள் என்றும், இது அனைத்து மாவட்டங்களிலும் 18 நாட்கள் தொடரும் எனவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT