இந்தியா

கேரளத்தில் கரோனா பரவலுக்கு அலட்சியமே காரணம்: முதல்வர் பினராயி விஜயன்

DIN

கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அனைவரது தரப்பிலும் அலட்சியம் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார். 

கரோனா பரவலைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், பின்னர் மக்கள் தாங்கள் மேற்கொண்ட பாதுகாப்பு முறைகளை குறைத்தனர். இதன் விளைவாகவே மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. 

திங்களன்று மாநிலம் முழுவதும் 102 புதிய குடும்ப சுகாதார மையங்களை திறந்து வைத்த முதல்வர் பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"ஆரம்ப காலத்தில் நாங்கள் கரோனா பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம், ஆனால், பின்னர் முன்னெச்சரிக்கைகள் ஒரு பொருட்டல்ல என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறைபாடு இருப்பதை நாங்கள்ஒப்புக்கொள்கிறோம். தற்போதைய நிலைமைக்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. எனினும், பொறுப்பு மிக்கவர்கள் குற்ற உணர்ச்சியுடன் மனம் திரும்ப வேண்டும். 

முதலில் நிலைமையை திறம்பட கையாண்ட எங்களிடம் பின்னர் சிறிது சரிவு ஏற்பட்டது. இதுவே நிலைமை மோசமடைய வழிவகுத்தது. சுருக்கமாக, ஒரு சிறிய அளவிலான கவனக்குறைவே இதற்கு காரணம் என்பதை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். நோயை குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதே சிறந்தது' என்று குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT