இந்தியா

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

DIN

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட 50 பேர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் அதிகம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசினார்.

ராமர் கோவில் பூஜையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT