முகப்பு
இந்தியா

ராமரின் அருளாசியால் கரோனா ஒழிந்துவிடும்: சிவ சேனை

ராமரின் அருளாசியால் நாட்டில் தற்போது நிலவும் கரோனா தொடர்பான பேரிடர் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
ராமரின் அருளாசியால் கரோனா ஒழிந்துவிடும்: சிவ சேனை
பகிர்:


மும்பை: ராமரின் அருளாசியால் நாட்டில் தற்போது நிலவும் கரோனா தொடர்பான பேரிடர் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது.

சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் தலையங்கத்தில் அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது.

அயோத்தியாவில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவதைப் போன்ற ஒரு பொன்னான நேரம் வேறு இருக்காது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வருகிறது. ஆனால், ராமரின் அருளாசியால் அது ஒழிந்து போய்விடும் என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற முக்கியப் பணியாற்றிய எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் புது தில்லியில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் காண்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியாவில் நாளை நடைபெறும் பூமி பூஜையைக் காண நாட்டு மக்கள் அனைவருமே ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →