ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் ஸ்ரீநகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் ஸ்ரீநகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை அடுத்து, அன்றைய தினம் ஸ்ரீநகரில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என்று சில தவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஷாஹித் இக்பால் சௌத்ரி பிறப்பித்த உத்தரவில், ஸ்ரீநகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஆகஸ்ட் 4 மற்றும் 5-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.