முகப்பு
இந்தியா

மும்பையில் கன மழை: போக்குவரத்து முடக்கம்

மும்பையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், உள்ளூர் ரயில் சேவை மற்றும் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
Heavy rain in Mumbai region; rail, road transport affected
பகிர்:

மும்பையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், உள்ளூர் ரயில் சேவை மற்றும் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளது. 

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையையொட்டி உள்ள தாணே மற்றும் பால்கர் மாவட்டங்களில் சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 12 மணி நேரத்தில் தஹானு மற்றும் பால்கரில் 350 மி.மீ பதிவாகியுள்ளது. தாணேவில் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளன. மேலும் இன்று பகலில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

செம்பூர், பரேல், ஹிந்த்மாதா, வடாலா மற்றும் மும்பையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இன்று காலையில் பெய்த மழையால் பால்கரில் மேற்கு ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளை மூடக் கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பையில் கடலோர மற்றும் தண்ணீர் புகும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →