முகப்பு
இந்தியா

தலித் இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
Cop suspended, arrested for beating Dalit man in Andhra Pradesh
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் பர்தர் கூறுகையில், 

காசிபுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் வேணுகோபால் ராவ் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியுள்ளார்.  இதையடுத்து, அந்த நபர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்தனர். வேணுகோபால் ராவ் தலித் நபரை அடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், அந்த ஆய்வாளரை இடைநீக்கம் செய்துள்ளனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.