இந்தியா

கரோனா தடுப்பு நிதி: தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு ரூ.890.32 கோடி நிதி

ANI

புது தில்லி: கரோனா தடுப்பு நிதியாக தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.890.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி, மாநிலத்தில் நிலவும் கரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.  கடந்த மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கரோனா தடுப்பு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.3 ஆயிரம் கோடி, மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது தவணையாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் கரோனா தடுப்பு நிதியாக தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்பட 22 மாவட்டங்களுக்கு ரூ.890.32 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில், மூன்றாவது தவணை விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT