முகப்பு
இந்தியா

புணேவில் இனி கரோனா உச்சமடையும்: மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மற்றும் தாணே பகுதிகளில் கரோனா பரவல் வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தொற்று அதிகம் பாதித்தப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மற்றும் தாணே பகுதிகளில் கரோனா பரவல், வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, “புணே மற்றும் தாணேவில் வரும் வாரங்களில் கரோனா பாதிப்பு உச்சமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு  பகுதிகளும் ஏற்கெனவே கரோனா பாதிப்பின் உச்சத்தின் மத்தியில் உள்ளன. மும்பையைப் போல, பாதிப்புகள் பின்னாளில் வீழ்ச்சியடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →