முகப்பு
கரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா

கரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா

கரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பகிர்:

கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

அந்தந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே பல முறை ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →